எத்தனை நாட்கள் விவசாயிகள் போராடினாலும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது : மத்திய வேளாண்துறை அமைச்சர் திட்டவட்டம்

எத்தனை நாட்கள் விவசாயிகள் போராடினாலும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து கடந்த 28 நாட்களுக்கு மேலாக டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கடும் குளிரையும் பாராமல் இரவு பகலாக தொடர்ந்து சாலைகளில் உறங்கியும், போராட்ட களத்தில் சமைத்து உணவருந்தி வருகின்றனர்.

Read more – 28 ஆண்டுகளுக்கு பிறகு கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கு : பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு ஆயுள் தண்டனை

கடும் பனியால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இதுகுறித்து, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :எந்த ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டு வரும் போது, முதலில் அதை கேலி செய்வார்கள், பின்னர் எதிர்ப்பார்கள், இறுதியில் ஏற்றுக்கொள்வது வழக்கம் என தெரிவித்தார். இந்த முறையும் அதுதான் நடந்து கொண்டிருப்பதாகவும் எத்தனை நாட்கள் விவசாயிகள் போராடினாலும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது என்றும் தெரிவித்தார்.

Exit mobile version