வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 20 வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் 20 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தையில் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.மத்திய அரசுக்கு எதிராக இந்த போராட்டத்தினை மேலும் தீவிர படுத்துவதற்காக விவசாய அமைப்பினர்களின் தலைவர்கள் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.
மேலும் அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இந்த தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு நாளை மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறது.
Read more-ஐபோன் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் : 7000 பேர் மீது வழக்குப்பதிவு,160 பேர் கைது
நாளை காலை 11.25 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற இருக்கிறது.இந்த கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்தும் வேளாண்சட்டங்கள் குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகிஉள்ளது.