செவ்வாய் கிரகத்தின் புகைப்படத்தை ஐக்கிய அமீரக விண்கலம் வெளியிட்டுள்ளது.
துபாய் :
ஜப்பானில் உள்ள தானேகஷிமா விண்வெளி மையத்தில் 1.3 டன் எடை விண்கலம் கொண்ட எச்-2ஏ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ந் தேதி ‘நம்பிக்கை’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. 2021-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்டதன் பொன்விழா ஆண்டு ஆகும். அதன் நினைவாகவே இந்த நம்பிக்கை விண்கலம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘நம்பிக்கை’ விண்கலம் 49 கோடியே 50 லட்சம் கி.மீ. விண்வெளியில் பயணித்து, 201 நாட்கள் பயணம் செய்து, செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை சென்றடைந்தது. ஐக்கிய அரபு அமீரகம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. சீனா அனுப்பிய விண்கலமும், அமெரிக்கா அனுப்பிய விண்கலமும் செவ்வாய் கிரகத்தின் அருகே சென்றுள்ளன.
விண்வெளி ஆய்வில் வளைகுடா நாடுகளுக்கு பெருமை சோ்க்கும் வகையில் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள விண்கலம் புதன்கிழமை எடுத்து அனுப்பியிருந்த படத்தில் செவ்வாய் கிரகத்தின் வடபுலமும் கிரகத்தின் மிகப் பெரிய எரிமலையான ஒலிம்பஸ் மான்ஸும் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் செலுத்தப்பட்டு, கடந்த 9-ஆம் ஆம் தேதி செவ்வாய் கிரத்தை அடைந்தது. அந்த கிரகத்தை 2 ஆண்டுகள் சுற்றி அந்த விண்கலம் ஆய்வுகள் மேற்கொள்ளும்.