கொரோனா வைரஸ் மூன்றாவது அலை இந்தியாவில் பரவ உள்ளதாக ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டன் ஆக்சிஜன் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்போதே ஆக்ஸிஜன் தயாரிப்பு பணிகளை துரிதப்படுத்தினால்தான் மூன்றாவது அலை வரும் என கணிக்கப்பட்டுள்ள அக்டோபர் மாதத்திற்குள் இலக்கை எட்ட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிண்டே இந்தியா நிறுவனம் இந்திய ஆக்ஸிஜன் தயாரிப்பில் மூன்றில் ஒரு பங்கு ஆக்ஸிஜனை தயாரிக்க மத்திய அரசுடன் புரிந்துணர்வு மேற்கொண்டுள்ளது.
மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுடன் இதற்காக லிண்டே நிறுவனம் தொடர்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அரசு மருத்துவமனையில் தயாராக இருக்கும்பட்சத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும். போன அலைகளின் போது பெரும்பாலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிர்கள் பறிபோனதாக செய்திகள் வெளியாகி கவலையை ஏற்படுத்திய நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி இப்போதே துரிதப்படுத்தப்பட்டு உள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.