ஊரடங்கால் வருமானம் இல்லாததால் வரலாற்றில் முதன்முறையாக, திருப்பதி தேவஸ்தானம் கணக்கில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தை எடுக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அதிகம் வருமானம் ஈட்டும் கோவில்களில் மிக முக்கியமானது திருப்பதி ஏழுமலையான் கோவில். ஆண்டிற்கு சுமார் 2 கோடி பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோவிலுக்கு மாதத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் வருமானமாக கிடைக்கிறது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், கடந்த 4 மாதங்களாக கோவிலின் வருமானம் வெகுவாக பாதிக்கப்பட்ட்டுள்ளது.
இதனால், கோவில் செலவுகள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது போன்றவற்றிற்கு பணம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை இல்லாத நடவடிக்கையாக,
முதல்முறையாக திருப்பதி கோயில் பணத்தை வங்கிகளிலிருந்து எடுக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கம் மற்றும் வங்கிகளில் உள்ள ரூ.14,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுவரை எந்த செலவிற்காகவும் வங்கியில் இருந்து பணத்தை எடுத்ததில்லை. சீனிவாச பெருமாள் ஏழுமலையான் பத்மாவதி தாயாரை திருமணம் செய்வதற்காக குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளைக் கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்திருக்கிறார். பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கொண்டே வட்டி கட்டுவதாக புராண கதை கூறுகின்றனர். இனி பெருமாள் எப்படி வட்டி கட்டுவாரோ என்பது பக்தர்களின் கவலையாக உள்ளது. என்னடா இந்த ஏழுமலையானுக்கு வந்த சோதனை.