தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளத்திற்க்கான நிலம் 6 மாதத்தில் கிடைக்கும்- மத்திய அரசு

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலத்தை இன்னும் 6 மாதத்திற்க்குள் தமிழக அரசு வழங்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி:

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் அருகே ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்து கூறியதாவது:-

விண்வெளித்துறையின் வேண்டுகோளை ஏற்று, ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்தில் 961 ஹெக்டேர் நிலத்தை அடையாளம் கண்டறிந்தது.

இன்னும் 6 மாத காலத்திற்குள் அந்த நிலத்தை தமிழக அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.மேலும், இதுபோன்ற கட்டமைப்பு திட்டங்களுக்கு நிலம் கைப்பற்ற 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும்.961 ஹெக்டேர் நிலத்தில், 431 ஹெக்டேர் நிலத்தில் அளவிடும் பணி முடிந்ததால்,மீதி நிலத்துக்கு அளவிடும் பணி நடந்து வருகிறது. மாதவன்குறிச்சி, படுக்கப்பத்து, பள்ளகுறிச்சி ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்று ஜிதேந்திர சிங் கூறினார்.

Exit mobile version