பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 3 பேர் உட்பட இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் அருகில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இன்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலின் போது எல்லை பாதுகாப்புப் படையை சேர்ந்த துணை ஆய்வாளர் ராகேஷ் தோவல் உள்பட மேலும் இரு வீரர்களும் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் பொதுமக்கள் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
பூஞ்ச், கெரன் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.ஜம்மு- காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.