திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குழந்தைகள்,வயதானவர்கள் தரிசனம் செய்யலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி:
நாடுமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து கோவில்,பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.அதன்பிறகு மத்திய அரசு கொண்டு வந்த பல தளர்வுகளின் அடிப்படையில் உலக பிரசித்தி பெற்ற கோவில்கள் திறக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா பரவல் காரணமாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.
அவர்களையும் அனுமதிக்கக்கோரி பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.இதை ஏற்று திருப்பதி தேவஸ்தானம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த ஆண்டு 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர்.இதையொட்டி, வருகின்ற 25 ம் தேதி முதல் ஜனவரி 3ம் வரை சொர்க்க வாசல் வழியாக கடவுள் தரிசனத்திற்கு தினமும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.