ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் ராணுவ வீரர்கள் குடியிருப்பின் மீது சுவர் இடிந்து விபத்து : 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் குடியிருப்பின் மீது சுவர் இடிந்த விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர்:

ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள மச்சடி பகுதியில் ராணுவ வீரர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு சுவர் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது.

Read more – விவசாயிகளின் நிலத்தை ஒருபோதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பறிக்க முடியாது : அமித்‌ஷா திட்டவட்டம்

தீடிரென ஏற்பட்ட இந்த இடிபாட்டில் ராணுவ வீரர்கள் சிலர் சிக்கிக்கொண்டனர்.அருகில் இருந்த மற்ற வீரர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டபோது பலத்த காயமடைந்த 3 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் 2 பேர் பலனின்றி உயிரிழந்தனர் .மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Exit mobile version