சரித்திரம் படைத்த பெண்கள்..இந்திய போர்க்கப்பலில் முதன்முறையாக..

இந்திய கடற்படை வரலாற்றில் முதல் முறையாக, போர்க் கப்பலில் இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய கடற்படையில் பல்வேறு பொறுப்புகளில் பல பெண்கள் பணி புரிந்தாலும், நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டும், கழிவறை உள்ளிட்ட பெண்களுக்கான தனிப்பட்ட வசதிகளை போதிய அளவு இல்லாதது போன்ற காரணங்களால் போர்க் கப்பல்களில் பெண்கள் பணியமர்த்தப்படுவது தவிர்க்கப்பட்டு வந்தது.

தற்போது, இந்த நிலைக்கு முடிவுகட்டி, முதல் முறையாக துணை லெப்டினென்ட்கள் ஆக தேர்வடைந்துள்ள குமுதினி தியாகி, ரித்தி சிங் ஆகியோர், போர்க் கப்பல்களில் அதிகாரிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.

செப்டம்பர் 21 ஆம் தேதி கொச்சியின் ஐ.என்.எஸ் கருடாவில் (INS Garuda) நடைபெற்ற விழாவில், “Observers” என்ற பிரிவில் “Wings” பட்டம் பெற்ற இந்திய கடற்படையின் 17 அதிகாரிகள் குழுவில் இந்த இருவரும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்படை விமான வரலாற்றில் சப் லெப்டினன்ட்  பதவியில் நியமிக்கப்படும் முதல் பெண் அதிகாரிகள் குமுதினி தியாகி மற்றும்   ரிதி சிங் ஆகிய இருவரும் ஆவர். போர்க்கப்பல்களில் இருந்து செயல்படும் வான்வழி போராளிகள் என்ற பெருமையை பெறும் இந்த இரு பெண்களும் மற்றுமொரு மைல்கல்லை உருவாக்கியுள்ளனர்.

இருவருக்கும் 22வது SSC Observer course முடிவடைந்ததுள்ள நிலையில் அதில், விமானத்தை செலுத்தல், பறக்கும் நடைமுறைகள், வான் போரில் பயன்படுத்தப்படும் தந்திரோபாயங்கள், நீர்மூழ்கி எதிர்ப்பு போர் மற்றும் வான்வழி ஏவியோனிக் அமைப்புளில் பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த அதிகாரிகள் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் கடல்சார் பணிகள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்களில் பணியாற்றுவார்கள்.

போர்க் கப்பல்களில் பயன்படுத்தப்பட உள்ள, புதிய MH-60 R ஹெலிகாப்டர்களில் சென்சார்களை கையாளுதல் பணிக்காக குமுதினி தியாகி மற்றும்   ரிதி சிங் ஆகிய
இருவரும் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version