இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியா :
2021 – 2022 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உள்ளார். அதில், சுகாதாரத்துறைக்கான நிதி இந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு சுயசார்பு சுகாதாரத்திட்டத்திற்கு ரூ.64,180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனுடன் 54.184 கோடி மதிப்பீட்டில் பிரதமரின் சுயசார்பு சுகாதாரத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிதி நிலை அறிக்கை தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு சுயசார்பு இந்தியா திட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அம்சங்களையும் வெளியிட்டுள்ளது.
Read more – திருச்சியில் 40 நிமிடத்தில் 60 வகையான பாரம்பரிய உணவு தயாரித்து பள்ளி மாணவி அசத்தல்…
1.41 லட்சம் கோடியில் நகர்புற தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய பழைய வாகனங்களை திரும்ப பெறும் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவின் வேளாண் பொருட்களை சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புதிய திட்டங்கள் குறித்தும், அனைத்து பெண்களும் கல்வி கற்று சுயசார்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.