எல்.ஐ.சி, ஏர் இந்தியா நிறுவனங்களை விற்க மத்திய அரசு முடிவு : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

எல்.ஐ.சி, ஏர் இந்தியா நிறுவனங்களை விற்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி :

எல்.ஐ.சி.,யில் பொது முதலீட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டு இந்த ஆண்டு முதல் எல்.ஐ.சி பங்குகள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா பங்குகளை விற்கவும் இந்த பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட முடியும் எனவும், ஏற்கனவே நிலுவையில் உள்ள பல அரசு நிறுவன பங்குகளை விற்கும் நடவடிக்கை தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more – இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை விரைவில் தொடங்கப்படும் : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

ஒரு காப்பீடு நிறுவனம், 2 பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும் எனவும், வங்கிகளின் மூலதன மேம்பாட்டிற்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.50 லட்சமாக இருந்த மூலதன உச்சவரம்பு ரூ.2 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version