கொரோனா மருந்திற்கான பதஞ்சலி நிறுவனத்தின் அறிமுக விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி :
பாபா ராமதேவ் நிறுவனமான பதஞ்சலி கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்தாக அறிவித்து மருந்தை விற்பனை செய்தது. ஏற்கனவே இந்த மருந்தானது அறிவியல் பூர்வமாக சோதனை செய்யப்பட்டது என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் அதற்கான ஆதாரங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை.
இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 19 ம் தேதி பதஞ்சலி நிறுவனம், ‘கொரோனில் கிட்’ என்ற பெயரில் கொரோனானில் மருந்தின் மேம்படுத்தப்பட்ட மாதிரி ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் வெளியிட்டது. மேலும், இந்த கொரோனில் மருந்திற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் பரவிய நிலையில், இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்து உலக சுகாதார அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா சிகிச்சைக்கு எந்தவொரு பாரம்பரிய மருத்துவத்தின் செயல்திறனையும் மதிப்பாய்வு செய்யவோ, ஒப்புதல் அளிக்கவோ இல்லை என்று விளக்கம் அளித்தது.
Read more – தமிழ் நாட்டில் மு.க. ஸ்டாலினை தவிர மக்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கிறார்கள் – அமைச்சர் கடம்பூர் ராஜு
இதையடுத்து, இந்திய மருத்தவ சங்கம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அடுக்கடுக்காக பல கேள்விகளை முன்வைத்தது. அதில், நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பவர், இதுபோன்ற தவறான திட்டத்தை வெளியிடுவது எந்த வகையில் சரியான ஒரு அணுகுமுறை ? உலகமே இதற்கான விடைகளை தேடிக்கொண்டிருக்கும் போது எந்த ஒரு பரிசோதனையையும் மேற்கொள்ளாமல் அரசு முன்னிலையில் வெளியிடுவது மிக பெரிய குற்றம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.