புதிய வேளாண் சட்டங்களால் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவில்லை அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை:
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தின் நன்மைகளை விளக்கிக்கூற மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஒருநாள் பயணமாக சென்னையை அடுத்த மறைமலை நகரில் விவசாயிகளை சந்தித்து பேசினார்,அதன்பிறகு கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.அப்பொழுது கூறியதாவது :
Read more – வருகிற ஜனவரி 1 ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டாயம் : மத்திய அமைச்சர் தகவல்
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.இன்னும் இரண்டு ஆண்டுகளில் அவர்களின் வருமானம் மேலும் அதிகரிக்கும் என்றார். மேலும் அவர் , கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்காக பாஜக அரசு தொடர்ந்து அர்ப்பணித்து கொண்டு வருகிறது.இந்த புதிய வேளாண் சட்டங்களால் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவில்லை அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.