விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து கடந்த 29 நாட்களுக்கு மேலாக டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
இந்த போராட்டத்தில் கடும் குளியரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த கடும் குளிரால் 30 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சென்ற விமானம் உடனடியாக தரையிறக்கம் : காரணம் என்ன?
இந்தநிலையில் மத்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அதில், முன்னாள் பிரதமரும், விவசாய தலைவர்களின் முன்னோடியான சௌத்ரி சிங்கை நினைவுகூர்ந்து விவசாயிகளின் வருமானமும், மரியாதையும் கூடவும் நாங்கள் முயற்சிக்கிறோம்.
எங்கள் பாரத பிரதமர் மோடி சரண்சிங்கை பின்பற்றி விவசாயிகளின் நலனுக்காக போராடி வருகிறார்,அவர் ஒருபோதும் விவசாயிகளை துன்பப்பட விடமாட்டார்.சிலர் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய சொல்லி தொடர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.நிச்சயம் ஒருநாள் இந்த விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.