முன்னாள் முதலமைச்சர் காலமானார்..அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் காலமானார்.

92 வயதான முலாயம் சிங் யாதவ், கடந்த மே மாதம் லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், வயிற்று வலியின் காரணமாக அவர் சிகிச்சை பெறுவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாயின.

அண்மையில் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் முலாயம் சிங் வீடு திரும்பினார். இந்த நிலையில், நேற்று அவர் அவுரியா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரில் காலமானார்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மூன்று முறை உத்திர பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த முலாயம் , தனது வாழ்நாள் முழுவதும் விவசாயிகள், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்காகவே பணியாற்றினார் என அவரது மகனும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்

Exit mobile version