ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு மனைவியின் வயிற்றை கிழித்துப் பார்த்த கணவன்..

உத்தரபிரதேசத்தில் ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட ஐந்து மகள்களின் தந்தை, கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கிழித்து என்ன குழந்தை என்று பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் படான் பகுதியை சேர்ந்தவர் பன்னலால். கூலித் தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே ஐந்துபெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், மீண்டும் கர்ப்பம் தரித்த இவரது மனைவி அனிதா தேவி ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

அவருக்கு, ஏற்கனவே ஐந்து பெண் குழந்தைகள் பிறந்துள்ளதால் தற்போது பிறக்க போகும் குழந்தையும் பெண்ணாக பிறந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக கருக்கலைப்பு செய்யும்படி கணவன் கட்டாயப்படுத்தியுள்ளார். இது சம்பந்தமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இது சம்பந்தமாக மீண்டும் வாக்குவதாம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பன்னலால் கூர்மையான ஆயுதத்தை எடுத்து மனைவியின் வயிற்றை கிழித்து குழந்தையின் பாலினத்தை காண முயற்சித்துள்ளார்.

கணவனின் செயலால் அலறி துடித்த அனிதா தேவியின் சத்தம் கேட்டு பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை பரேலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை உறுதிபடுத்த்திய போலீஸ் எஸ்.பி., பிரவீன் சிங் சவுகான் கணவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.

Exit mobile version