உ.,பி-யில் பசுவுக்கு பாலியல் வன்கொடுமை..!!

Animal Sexual Abuse
arrest

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பசுவை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்த நபரை சி.சி.டி.வி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.

லக்னோவின் சரோஜ்னி நகர் என்கிற பகுதியில் வசித்து வருபவர் மஜித். கடந்த ஏப்ரல் 23-ம் தேதி தெருவில் சுற்றித்திரிந்த பசுவை பிடித்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். அதை தொடர்ந்து அவருடைய நடவடிக்கையில் மாற்றம் வந்துள்ளது.

இதனால் மஜித்தின் பக்கத்து வீட்டுக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அவர்கள் வசித்து வந்த தெருவில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை அந்த நபர் ஆய்வு செய்துள்ளார். அதில் மஜித் பசுவை பாலியல் வன்கொடுமை செய்வது தெரிந்துள்ளது.

மீண்டும் இரண்டாவது முறையாக பசுவை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது பக்கத்துவீட்டுக்காரர் மஜித்தை தடுத்து நிறுத்தினார். உடனடியாக பசுவின் உரிமையாளருக்கு அவர் தகவல் கொடுத்தார். உரிமையாளர் காவல்துறைக்கு புகார் அளித்தார்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த மஜித்தை உள்ளூர்வாசிள் தேடுதல் குழு அமைத்து பிடித்தனர். அவரை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து இந்த சம்பவம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மஜித் கைது செய்யப்பட்டார்.

Exit mobile version