உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்று சமூக வலைத்தளங்களில் பரப்பினால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒரேநாளில் இந்த கொடூர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற முக்கிய காரணங்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த பற்றாக்குறை காரணமாக பல உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். இந்தநிலையில், இதுகுறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது :
உத்தரபிரதேச மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது இல்லவே இல்லை. தொடர்ந்து, ஆக்சிஜன் பற்றாக்குறை என்று யாராவது சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவலை பரப்பினால் அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.