உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வார் கும்பமேளா முடிவடைந்ததால் அங்கு இன்று முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஹரித்வார் கும்பமேளாவானது கடந்த 1 ம் தேதி தொடங்கி 30 ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இந்த கும்பமேளா மூலம் பக்தர்களுக்கு அதிகளவில் கொரோனா பரவியதால் கும்பமேளா நாட்களை குறைக்கவேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, நேற்று நடந்த சஹி ஸ்நான் எனப்படும் புனித நீராடல் நிகழ்ச்சி மூலம் கும்பமேளா நிறைவடைந்தது. நேற்று நடந்த இந்த புனித நீராடலில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் கலந்து கொண்டனர்.
Read more – இன்னும் ஒரு மாதத்திற்குள் 44 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்படும் : டெல்லி முதல்வர் உறுதி
இந்தநிலையில், ஹரித்வார், ரூர்க்கி, லக்சர் மற்றும் பகவான்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஊரடங்கு அமல்படுத்த மாநில நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.