உத்தரகண்ட் மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும்; போர்க்கால அடிப்படையில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது என உத்தரகண்ட் முதலமைச்சர் பேட்டி.
டெல்லி, உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.நிலவரம் குறித்து பார்வையிட இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரகண்ட் செல்ல உள்ளார்.
இந்நிலையில், மாநிலத்தின் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை ஓரளவுக்கு குறைந்துள்ளது ஆனால் மிக பெரிய சேதங்கள் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது உணவு. இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகலாம் என தெரிவித்தார்.
கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் , ரயில் பாதைகள் அடித்து சொல்லப்பட்டுள்ளது. அதிக நீர் காரணமாக ஆறுகள் பாதைகள் மாறியுள்ளது எனவும் இதனால் பல இடங்களில் பாலங்கள் இடிந்துள்ளது என்றார். முதலில் துண்டிக்கப்பட்டுள்ள சாலைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம், பல கிராமங்களில் வீடுகளுக்குள் நீர் சூழ்ந்து உள்ளது அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்க உள்ளூர் நிர்வாகத்தை அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
இந்த பேரிடர் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் மாநில அரசு சார்ப்பில் வழங்கப்படும் என தெரிவித்தார். அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் 10 கோடி அளவுக்கு பேரிடர் நிதியை மாநில அரசு ஒத்துக்கியுள்ளது. இதன் மூலம் பேரிடர் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள், குறிப்பாக சாலையை மூடி உள்ள நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்புகளை அகற்ற போர்க்கால அடிப்படையில் முக்கியத்துவம் கொடுத்து மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
வெள்ளம் மற்றும் நிலசரிவில் சிக்கியுள்ள சுற்றுலா பயணிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் “Char Dham” நிலைமை மெல்ல மெல்ல சீராகி வருகிறது என தெரிவித்தார். நாளைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் உத்தரகண்ட் மாநில வெள்ள பாதிப்புகளை பார்வையிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.