மறுக்கூட்டலில் 100 மார்க் பெற்ற பார்வைக் குறைபாடுள்ள மாணவி

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுப்ரியா என்ற பார்வைக் குறைபாடுள்ள மாணவிக்கு கணக்கில் 2 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்திருந்த நிலையில், மறுகூட்டலில் 100 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுப்ரியா, பத்தாம் வகுப்பு மாணவி.இவரின் தந்தை சாஜுராம், கணக்கு ஆசிரியர்.சுப்ரியா பார்வைக் குறைபாடுள்ளவர்.இவருக்கு பாதியளவு பார்வை மட்டும் தான் தெரியும்.ஆனால், நன்றாக படிக்கக்கூடியவர்.இவர் அன்மையில் தனது பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதியிருந்தார்.அனைத்துத் தேர்வுகளையும் நல்ல முறையில் எழுதியிருந்தார் சுப்ரியா.

தேர்வு முடிவு எப்பொழுது வருமென்று காத்திருந்தவருக்கு, பேரதிர்ச்சி காத்திருந்தது. அனைத்து பாடங்களிலும் 90 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.ஆனால் கணக்கில் மட்டும், 2 மதிப்பெண்கள் தான் பெற்றிருந்தார். சுப்ரியாவிற்கு நன்றாக தெரியும் தான் கணக்கு பாடத்தில் 2 மதிப்பெண்கள் வாங்க வாய்ப்பேயில்லையென்று. கணக்கு ஆசிரியரான அவரது தந்தைக்கும் தேர்வு முடிவில் உடன்பாடில்லை.

எனவே, அவரது தந்தை தன் மகளுக்காக ரூ.5000 செலவு செய்து, மறுகூட்டலுக்காக விண்ணப்பித்தார். தற்போது, மறுகூட்டலில் சுப்ரியாவிற்கு, 2 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்த அதே கணிதத்தில் 100 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு 2 மார்க் மட்டும் கிடைச்சதுனால ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.அப்பா மறுக்கூட்டலுக்கு அப்லை பண்ணாங்க.இப்ப 100 மார்க் கிடைச்சிருக்கு.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.ஆனா எனக்கு நடந்த மாதிரி வேற யாருக்கும் நடக்கக் கூடாது”, எனக் கூறினார்.  

Exit mobile version