கர்நாடக அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் 50 ஆயிரம் கனஅடியாக குறைப்பு!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து நீர் வெளியேற்றம் 78 ஆயிரம் கன அடியிலிருந்து 58 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது!

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும், கபினி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கன மழை பெய்து வந்ததன் காரணமாக இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பியது. இதனையடுத்து அணைகளிலிருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று இரவு வரை 78 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி நீர் வெளியேற்றம் 50 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

அணைகளில் இன்றைய நீர் மட்ட விபரம்

கே.ஆர்.எஸ் அணை.

உயரம் : 128.40
நீர் இருப்பு : 121.12
நீர்வரத்து : 40,794 கன அடி
நீர் வெளியேற்றம் : 35,000 கன அடி

கபினி அணை :

உயரம் : 2284 (கடல் மட்டத்திலிருந்து )
நீர் இருப்பு : 2283.54
நீர்வரத்து : 20,000 கன அடி
நீர் வெளியேற்றம் : 15,000 கன அடி.

இவ்விரு அணைகளிலிருந்து கடந்த 2 நாட்களுக்கு மேலாக வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேலாக தண்ணீர் தமிழகம் நோக்கி சென்றது. தற்போது, அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைவின் காரணமாக, வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் கபிலா, காவிரி ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இந்த வெள்ளத்தின் காரணமாக யாருக்கும் பாதிப்பு இல்லை என்றாலும், விளைநிலங்கள், வீடுகள் நாசமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version