மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவின் சவாலை ஏற்று நந்திகிராமத்தில் போட்டியிடுகிறார்.
மேற்கு வங்காளம்:
மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளனர். இங்கு தேர்தலானது 8 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த வாரம் தெரிவித்தார்.
இந்தநிலையில், மேற்கு வங்கத்தில் தற்போது முதல்வராக பதவி வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முடிந்தால் நந்திகிராமத்தில் போட்டியிடுங்கள் என்ற பாஜகவின் சவாலை ஏற்று இந்த தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.
Read more – இன்றைய ராசிபலன் 06.03.2021!!!
மேலும், 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் சுமார் 100 பெண்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்படுவார்கள் என்று மம்தா பானர்ஜி அதிரடி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மம்தா பானர்ஜி “உங்கள் வாக்கு வங்கத்தின் மகளான எனக்கே” என்று பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் போன்ற பெரும் கட்சிகளையும் எதிர்த்து களமிறங்கிக்கிறார்.