நான் ஒரு பிராமண பெண், எனக்கு இந்து தர்மத்தை சொல்லிக்கொடுக்காதீர்கள் : பாஜகவை எதிர்த்து சீறிப்பாய்ந்த மம்தா

நானும் ஒரு இந்து பிராமண பெண் தான், எனக்கு இந்து தர்மத்தை பற்றி சொல்லிக்கொடுக்க பாஜகவிற்கு அவசியம் இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நந்திகிராமம் :

தமிழகத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த சுவேந்த் அதிகாரி, தற்போது பாஜகவில் இணைந்து மம்தா பானர்ஜிக்கு எதிராக நந்தி கிராமத்தில் போட்டியிடுகிறார். நந்திகிராமம் சுவேந்த் அதிகாரிக்கு பெரும் செல்வாக்கு தொகுதி என்பதால் மம்தா பானர்ஜிக்கு சவால் விடுத்தார்.அதில், என்னை எதிர்த்து மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் நான் மம்தாவைதோற்கடிக்காவிட்டால், அரசியலில் இருந்தே விலகுகிறேன் என்று சுவேந்த் அதிகாரி தெரிவித்தார்.

Read more – திமுகவிற்கு அளித்த ஆதரவு ஒரே நாளில் வாபஸ்… கருணாஸின் அடுத்த முடிவு என்ன ?

இந்தநிலையில், என்னிடம் இந்துத்துவா முத்திரையைப் பயன்படுத்தி அரசியல் செய்ய வேண்டாம். நான் இந்துப் பிராமணப் பெண். என் வீட்டிலிருந்து கிளம்பும் முன் ஒவ்வொரு நாளும் சந்திபாத் செய்துவிட்டுத்தான் கிளம்புகிறேன் அதனால் எனக்கு யாரும் இந்து தர்மத்தை சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசிய இல்லை என்று மம்தா சொல்லிவிட்டு, நான் மக்களின் பைகளில் பணத்தைத் திணித்து வாக்கு சேகரிப்பவள் அல்ல, ஏப்ரல் 1 ம் தேதி தெரியும் அனைவரும் ஏப்ரல் ஃபூல் ஆகப்போகிறார்கள் என்று பா.ஜ.க விற்கு மம்தா நேரடி சவாலை விடுத்துள்ளார்.

Exit mobile version