வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணையதள சேவைகள் நேற்றிரவு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கி அதன் பயனர்களை அவதிக்குள்ளாக்கியது.
நாடு முழுவதும், ஃபேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள சேவைகள் தற்காலிகமாக 8 மணி நேரத்திற்கு முடங்கியது. தொழில்நுட்ப கோளாறால் முகநூல், வாட்ஸ் அப் போன்ற இணையதள சேவைகள் முடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வர் பிரச்சனை காரணமாக சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இணைய சேவை செயலிகளின் முடக்கத்தால் இணையதள வாசிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
இதனைத் தொடர்ந்து செயலிகள் முடங்கியது குறித்தான மீம்ஸ்களும் வைரலாகி வருகிறது. சிலர் தங்களது நெட்வொர்க்கில் தான் பிரச்சனை என நினைத்து ஏரோ ப்ளேன் மோடிற்கு சென்று சென்று வந்ததாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.