நண்பர்கள், குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் பேஸ்புக்கில் பகிரப்படாது : வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்

நண்பர்கள், குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் பேஸ்புக்கில் பகிரப்படாது என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் அதிக தனிநபர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் ஆப் செயலி தற்போது புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அறிவித்தது. மேலும், இது தொடர்பாக வாட்ஸ் ஆப் செயலியில் குறும்செய்தியும் அனுப்பப்பட்டது. இந்த குறும்செய்தியால் பொதுமக்களிடையே பல குழப்பங்கள் மற்றும் கேள்விகள் எழுந்து வருகிறது.

Read more – மதுரை டி.குன்னத்தூரில் ஜெயலலிதாவிற்கு கோவில் : வருகின்ற ஜனவரி 30 ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர்

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் செயலியில் இந்த புதிய அப்டேட்டின் மூலம் தனிநபர் பேசும் செய்திகள் மற்றும் தகவல்கள் தானாகவே பேஸ்புக்கில் பகிரப்படும் என்று ஒரு சில புரளிகள் கிளம்பியது. இதன் அடிப்படையில் பலரும் வாட்ஸ் ஆப் செயலியை அன் இன்ஸ்டால் செய்து வருகின்றனர். மேலும், பிரைவசி பாலிசி அப்டேட் செய்யவில்லை என்றால் அடுத்த மாதம் முதல் நம்மால் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் வாட்ஸ் ஆப் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது, இந்த தகவல் குறித்து பின்வருமாறு :

*தனி நபரின் செல்போன் விவரங்கள், இருப்பிட முகவரி பேஸ்புக்கில் பரிமாற்றம் செய்யப்படாது.

*வாட்ஸ் அப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும்.

*பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரத்தை சேமித்து வைக்க மாட்டோம்.

*பயனாளர்கள் தகவல்களை நீக்கவோ, டவுன்லோடு செய்து கொள்ளவோ முடியும்.

என்று தெரிவித்துள்ளது.

Exit mobile version