இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடங்குவது எப்போது? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்!!

கொரோனா 3 ஆம் அலை வீசும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என தொற்றியல் நோய் நிபுணர்கள் விளக்கம்.

கொரானா 3 ஆம் அலை வீசுவதற்கான வாய்ப்புகள் ஏறத்தாழ இல்லை என்று, அது தொடர்பான ஆய்வுகளை நடத்திய மருத்துவர்களும் தொற்றியல் நோய் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரசின் மரபுக்கூறு தரவரிசையை ஆய்வு செய்ததில் அந்த வைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். சில மருத்துவர்கள் கூறியது. போன்று அக்டோபர் அல்லது நவம்பர் மாத வாக்கில் 3 ஆம் அலை வீசாது என்றும் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்து விட்டதாக கருதலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெருவாரியாக தடுப்பூசி போடப்படுவதால், கொரோனா வைரசின் தொற்றும் திறன் குறைந்து விட்டதாகவும், அப்படி ஏதாவது 3 ஆம் அலை வீசினால் அதன் பாதிப்பு மிகவும் லேசாகவே இருக்கும் எனவும் ஆய்வு நடத்திய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version