மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்ய சேது அமைப்பு செயலி கொரோனா கிளஸ்டர்களை கண்டறிய உதவியாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக மத்திய அரசால் ஆரோக்கிய செயலி அமைப்பு உருவாக்கப்பட்டது. கொரோனா பாதித்தவர்கள் அரசிடம் இருந்து தப்பிக்காமல் இருக்க இது உதவுகிறது. இதன் மூலம் அவர்களை எளிதாக அடையாளம் கண்டறிய முடியும் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை துல்லியமாக கண்டறிய முடியும்.
கொரோனா பாதித்தவர்கள் மட்டுமின்றி ரயில் மற்றும் விமான பயணம் செய்பவர்களும் கூட இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கொரோனா தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கவும் நோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும் மொபைல் பயன்பாடுகள் போன்ற தொழில்நுட்பங்கள் பெரிய பயனுள்ளதாக உள்ளன. இந்தியாவில் 15 கோடி மக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆரோக்ய சேது பயன்பாடு” அத்தகைய ஒரு தொழில்நுட்பம் என தெரிவித்தார். இந்த ஆரோக்ய சேது செயலி நகரங்களில் கொரோனா கிளஸ்டர்களை கண்டறிய பெரிதும் உதவியதாகவும் அவர் தெரிவித்தார்.