தேசிய நெடுஞ்சாலைகளை மூட யார் அனுமதி கொடுத்தது ? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுத்தது யார்? தேசிய நெடுஞ்சாலைகளை மூட அனுமதி அளித்தது யார் ? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியான கேள்வி எழுப்பியது.

புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்களையும் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 22 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.இந்த போராட்டத்தினை நாடுமுழுவதும் தீவிர படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,விவசாய போராட்டத்தில் 40 க்கும் அதிகமான விவசாய அமைப்பினர்கள் டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்தின் விளைவாக போலீசார் டெல்லியிலிருந்து ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுடன் இணையும் முக்கிய சாலைகளை முடக்கியது.இதன் விளைவாக தேசிய தலைநகரின் பல சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

‘டெல்லியில் விவசாயிகள் அதிகளவில் கூடியுள்ளதால் கொரோனா தொற்று பரவல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.மேலும் சாலைகளை மறித்து விவசாயிகள் போராடி வருவதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.இதனால் டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும்’ என டெல்லி பகுதியை சேர்ந்த ரிஷப் சர்மா,ரீபக் கன்சலின்,வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.

Read more – இன்றைய ராசிபலன் 17.12.2020!!!

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மத்திய அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.அதில்,விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுத்தது யார்? தேசிய நெடுஞ்சாலைகளை மூட அனுமதி அளித்தது யார் ? என்று கேள்வி எழுப்பினர்.அதனை தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கிசான் குழுக்களுடன் இணைந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாய அமைப்பினர் போன்றோருடன் ஒரு குழு அமைக்கலாமா என்றும்,இதற்கு பதிலளிக்க டெல்லி,ஹரியானா மாநில அரசுகளும்,மத்திய அரசும் இன்று பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.இந்த அமர்வு இன்று( டிசம்பர் 17) மீண்டும் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version