துர்கா பூஜையின் போது யமுனை ஆற்றில் கட்டுப்பாடுகளை மீறினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் என டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
டெல்லி, அக்டோபர் 11ம் தேதி முதல் நாளை வரை கொண்டாடப்பட்டு வரும் துர்கா பூஜையின் போது கோவில்கள்/சாலைகள்/வீதிகள் என டெல்லியில் பல்வேறு இடங்களில் துர்கா தேவியின் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், வழிபட்ட சிலைகளை யமுனை போன்ற புண்ணிய நதிகளை கரைபார்கள்; இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டு கடுமையான சுகாதார சீர்கேட்டினை சந்திக்கும் நிலையில் டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு வரியம் பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் சில அறிவுரைகள் வழங்கி உள்ளது. அதன்படி, டெல்லியில் துர்கா பூஜையின் போது வழிபட்ட சிலைகளை கரைக்க மற்றும் வழிபாடு நடத்த குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதை தவிர மற்ற இடங்களில் பூஜை செய்ய அனுமதி கிடையாது எனவும் அதை மீறுவோர் மீது 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரசாயன கலந்த வண்ணங்கள் சிலைகளை மீது பூசப்பட்டு இருப்பதால் அதிலிருந்து வெளியேறும் நச்சு கழிவுகள் புற்றுநோய்,தோல் நோய் மற்றும் சுவாச கோளாறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவை தவிர சிலை செய்ய கூடியவர்களும் இயற்கை பொருட்களில் இருந்து மட்டுமே சிலை செய்ய வேண்டும்;தடைசெய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவை பயன்படுத்துவது குற்றம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சிலைகளை செய்த பின்பு, நச்சு தன்மையற்ற வர்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெரிய குடியிருப்பு பகுதிகளில் வசிப்போர் தாங்கள் வழிபட்ட சிலைகளை வீட்டின் வெளியே ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி அதில் கரைக்களாம் எனவும் பூஜைக்காக பிளாஸ்டிக் அல்லாமல் காகிததால் செய்யப்பட்ட பூக்களை பயன்படுத்தினால் அதனை குப்பை சேகரிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
டெல்லி மாசுகட்டுபாட்டு வாரியம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை மக்களிடம் எடுத்துரைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்படி மக்கள் அதிக அளவில் கூட தடை செய்யப்பட்டுள்ளது என்பதால் அதனையும் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லைக்குள் தடை செய்யப்பட்ட சிலைகளை கொண்டுவரும் வாகனங்களை எல்லை பகுதியில் தடுத்து நிறுத்த காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.