உத்தரபிரதேசத்தில் கால் பதித்த ஜிகா வைரஸ்: புதிதாக 30 பேருக்கு தொற்று பாதித்த பயங்கரம்…!!

உத்தரபிரதேசத்தில் கால் பதித்த ஜிகா வைரஸ்: புதிதாக 30 பேருக்கு தொற்று பாதித்த பயங்கரம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் புதிதாக 30 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் பணியாற்றி வந்த இந்திய விமானப்படை அதிகாரி ஒருவருக்கு முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

பின் அடுத்தடுத்து 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து அதே மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் விமானப்படை பகுதியை சுற்றி இருப்பவர்கள் என மாவட்ட சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கான்பூரில் புதிதாக 30 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 66 ஆக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version