BEL வேலைவாய்ப்பு 2021

2021ம் ஆண்டுக்கான பாரத் எலக்ட்ரானிக்ஸ் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. தகுதி, நேர்காணல் நாள், விண்ணப்பிக்க கடைசி நாள் உள்ளிட்ட முழு விபரங்கள் இந்த தொகுப்பில் காணலாம்.

பெல் (BEL) Bharat Electronics நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்

தற்போதைய பெல் வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 02 ஜனவரி 2021 அன்று இந்த அறிவிப்பை பெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான பெல் ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 06 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.

பெல் இன் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் திட்ட பொறியாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.bel-india.in/ என்ற பெல் இன் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.

01.பெல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான திட்ட பொறியாளர் (Project Engineer) பணிக்கான காலியிடங்கள்


பெல் நிறுவனமானது சமீபத்தில் திட்ட பொறியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 16.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்பெல்
பணிதிட்ட பொறியாளர்
கல்வி தகுதிபி.இ/ பி.டெக்.
வேலைக்கான இடம்போர்ட் ப்ளேர், குர்கான், கொச்சி, காந்தி நகர், கொல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை, மும்பை, பெங்களூர்
மொத்த காலியிடங்கள்06
வயது வரம்பு28 வயதிற்கு மேல்
சம்பளம்35,000 முதல் 50,000 வரை
விண்ணப்பிக்க துவக்க தேதி02.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி16.01.2021


வயது வரம்பு தளர்வு:

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வும் மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

  1. எழுத்து தேர்வு
  2. நேர்காணல்

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

Exit mobile version