ரயில்வேத் துறையில் மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு..ரூ.95 ஆயிரம் வரை ஊதியம்

தமிழகத்தில் மேலும் நீடிக்கப்பட்ட ஊரடங்கினால் எத்தனை நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியுமா?
ரயில்வே துறையில் காலியாக உள்ள Contract Medical Practitioner பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

பணியிடங்கள்:

மத்திய ரயில்வேயில் Contract Medical Practitioner பணிகளுக்கு 18 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 53 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் Degree in Medical/ MBBS, தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 75,000 /- முதல் அதிகபட்சம் ரூ. 95,000 /- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் online Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அறிய ww.cr. indianrailways.gov.in என்ற இணைய முகவரியை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 30.11.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்பங்களை மேலே குறிப்பிட்டுள்ள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பிறகு cpogazcmp@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

Exit mobile version