இந்த வருட ஐபிஎல் தொடர் இப்படித் தான்..ரசிகர்களுக்கு அனுமதி எப்பன்னு தெரியுமா?

ஐபிஎல் தொடரின் 13வது சீசன் பல்வேறு கொரோனா முன்னெச்சரிகைகளுடன், அபுதாபியில் இன்று தொடங்குகிறது.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் நடைபெற இருந்த நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் 6 மாதங்கள் கழித்து இன்று தொடங்குகிறது. மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தொடரின் பாதியில் 30% ரசிகர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 53 நாட்கள் நடைபெறும் தொடரில், 8 அணிகள் 56 லீக் போட்டிகளில் பங்கேற்க உள்ளன. இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிகையாக வீரர்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு, வழிகாட்டு நெறிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதன்படி, பந்துகளின் மீது உமிழ்நீர் பயன்படுத்துவது தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறினால், ஒவ்வொரு அணிக்கும் இரண்டு முறை எச்சரிக்கை செய்யப்படும், பிறகு எதிரணியினருக்கு 5 ரன்கள் கொடுக்கப்படும் .

டாஸ் செய்த பிறகு இரு அணியின் தலைவர்களும் கை குலுக்குவது மரபு அதுவும் இந்த சீசனில் தடை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றின் காரணத்தால் வீரர் யாரேனும் அவதிப்பட்டால் மாற்று வீரரைக் களம் இறக்கிக் கொள்ளலாம்.
ஒரு பந்து வீச்சாளருக்குப் பதில் பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளரை மாற்று வீரராகக் களம் இறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது

ஐபிஎல் சீசனில் முதன்முறையாக மூன்றாம் நடுவரின் மூலம் நோ பால் கொடுக்கும் விதி கொண்டுவரப்பட்டுள்ளது . Front foot no ball விதியானது கள நடுவரிடம் இருந்து மூன்றாம் நடுவருக்கு மாற்றப்பட்டுள்ளது . இந்த விதியானது கடந்து ஆண்டு நடைபெற்ற இந்தியா- மேற்கிந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் பின்பற்றப்பட்டது ‌.

ஒரு நாளில் இரண்டு போட்டிகளை நடத்துவது குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 நாட்கள் மட்டுமே இரண்டு போட்டிகள் ஒரே நாளில் நடத்தப்படும்.

இந்த சீசனில் போட்டியானது இரவு 7.30 மணிக்கும் இரு ஆட்டங்கள் நடைபெறும்போது 3.30 மணிக்கும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சீசனில் இது முறையே 8 மற்றும் 4 மணியாக இருந்தது .

டாஸ் போடும் போது கேப்டன்கள் கைகுலுக்கக்கூடாது. அதேபோல ஆட்டம் முடிந்த பிறகு வீரர்கள் கைகுலுக்குவதை தவிர்க்கவேண்டும். 

அணியில் இல்லாத வீரர்கள் பயிற்சியாளர்கள் இடைவெளிவிட்டு அமர்ந்திருக்க வேண்டும்.

தண்ணீர், குளிர்பானங்கள் எடுத்து வரும் வீரர்கள் கையை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

டவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் 

வீரர்கள் மைதானத்திற்குள் வரும் வரை மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். மைதானத்திற்கு உள்ளே வரும்போது அவர்களது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும், போன்ற பல்வேறு வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
 

Exit mobile version