Branch Postmaster(BPM), Assistant Branch Post Master(ABPM) & Dak SevakBPM பணியிடங்களை நிரப்ப இந்திய அஞ்சலக துறையில் அறிவிப்பு செப் 1 ஆம் தேதி வெளியானது.
மொத்தம் 3162 காலியிடங்கள் என அறிவிக்கப்பட்டது. அதற்கான கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு மற்றும் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் (Merit List) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30-9-2020 என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி விண்ணப்பதாரர்கள் 03-10-2020 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு விவரம்:
நிறுவனம் : இந்திய தபால் துறை
பணியின் பெயர் : Branch Postmaster(BPM), Assistant Branch Post Master(ABPM) & Dak SevakBPM
மொத்த பணியிடங்கள் : 3162
கடைசி தேதி : 03-10-2020
விண்ணப்பிக்கும் முறை : Online
வயது : 18 முதல் 40 வரை
கல்வி தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் http://www.tamilnadupost.nic.in/ என்ற இணைய தளத்தின் மூலம் 01.09.2020 முதல் 03.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.