பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு

வட்டம் சார்ந்த அலுவலர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக, ஆகஸ்ட், 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

பதவி மற்றும் காலியிடங்கள்

நிறுவனம் : பாரத ஸ்டேட் வங்கி (STATE BANK OF INDIA – SBI)

பணியிடங்கள் :

  • குஜராத் (Gujarat) –  750
  • மத்தியப் பிரதேசம் (Madhya Pradesh) – 296
  • கர்நாடகா (Karnataka) – 750
  • தமிழ்நாடு (Tamil Nadu) -550
  • சத்தீஸ்கர் (Chhattisgarh) – 104
  • தெலுங்கானா (Telangana) -550
  • ராஜஸ்தான் (Rajasthan) –  300
  • மகாராஷ்டிரா (மும்பையைத் தவிர) -517 (Maharashtra [excluding Mumbai]) -517
  • கோவா (Goa) – 33

கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது அதற்கு சமமான பல்கலைக்கழகத்தில், ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : ஆகஸ்ட் 1, 2020 வரை, 30 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது . வயது வரம்பில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுக்கு, Advertisement No. CRPD/CBO/2020-21/20  என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.08.2020

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version