TNPSC வெளியிட்ட புதிய அறிவிப்பு

தொழில் ஆலோசகர், சமூக ஆர்வலர் உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள 16 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

சம்பளம்: தொழில் ஆலோசகர் ₹36,200 – ₹1,33,100

சமூக ஆர்வலர் : ₹35,600 – ₹1,30,800

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்டு 26

விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்டு 31ம் தேதி முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது.

சமூக அலுவலர் பதவிக்கு கணினி வழித்தேர்வு நவம்பர் 12ம் தேதி காலை மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ளது. சமூக அலுவலர், தொழில் ஆலோசகர் பதவிகளுக்கான கட்டாய தமிழ்மொழி தகுத்தேர்வு பிற்பகல் 2:30 மணி முதல் 5:30 மணிவரை நடைபெறும்.

தொழில் ஆலோசகர் பதவிக்கு நவம்பர் 13ம் தேதி பிற்பகல் 2:30 மணிமுதல் 5:30 மணி வரை நடைபெறும்.

விருப்பம் உள்ளவர்கள் https://www.tnpsc.gov.in/ சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/tamil/VOC%20&%20CO%20Tamil.pdf .

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version