தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் (tnpsc) குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சி துணை இயக்குநர், வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கு ஆகஸ்டு 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்டு 27 முதல் ஆகஸ்டு 29ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். அக்டோபர் 30ம் தேதி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் முதன்மை தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை சார்பில் டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வுக்கு சென்னையில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை கிண்டியில் இயங்கிவரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்குகிறது.இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்காணும் முகவரியில் சென்று நேரடியாக கலந்து கொள்ளலாம்.
முகவரி:
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
ஏ-28, பர்ஸ்ட் ப்ளோர்,
டான்சி கட்டடம்,
திரு.வி.க தொழிற்பேட்டை,
கிண்டி, சென்னை-32.
மேலும் விவரங்களுக்கு 9361566648, 8072584856.
