ஃபிட்டர், எலெக்ட்ரீசியன், டேட்டா எண்ட்ரி உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்க டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி கடைசி நாளாகும்.

மொத்தப் பணியிடங்கள் : 493
நிறுவனம் : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ( Indian Oil Corporation Limited – IOCL )
பணியிடம் : தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேஷ், தெலுங்கானா
பதவி :
- Trade Apprentice Fitter
- Trade Apprentice Electrician
- Trade Apprentice Electronic Mechanic
- Trade Apprentice-Instrument Mechanic
- Trade Apprentice-Machinist
- Trade Apprentice-Accountant
- Trade Apprentice- Data Entry Operator
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.12.2020
வயது வரம்பு : 31.10.2020-ன் படி 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு.
கல்வித் தகுதி :
- 10-ஆம் வகுப்பு தேரிச்சியுடன், ஃபிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரீசியன் மெக்கானிக், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக் மற்றும் மெஷினிஸ்ட் பிரிவில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் எந்தவொரு துறையிலும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://iocl.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள http://iocl.onlinereg.in/ioclsrreg1120/Images/Advertisement_2020.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!