எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரத்தில் மத்திய அரசில் வேலை

மத்திய அரசிற்கு உட்பட்ட கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோவ் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : கரும்பு இனப்பெருக்க நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Junior Research Fellow

கல்வித் தகுதி : M.Sc Biochemistry, M.Sc Biotechnology, M.Sc Microbiology, M.Sc Agriculture, M.Tech Biotechnology, M.Sc Life Science துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

ஆண் விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டும், பெண் விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மாதம் ரூ.31,000 மற்றும்கூடுதல் பணப்பலன்கள் கிடைக்க பெறும்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://sugarcane.icar.gov.in/ என்ற இணையதளம் மூலம் 25.09.2020 தேதி மாலை 4.15 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் : Dr. Govind P. Rao, PS, Div Pl Pathol, ICAR-Indian Agricultural Research Institute Pusa Campus, New Delhi – 110012.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பணியிடம் குறித்த மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sugarcane.icar.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Exit mobile version