8ம் வகுப்பு தேர்ச்சி போதும் – 160 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சகத்தின் கீழ் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் காலியாகவுள்ள 160 ஆவணங்கள் கிளார்க் மற்றும் பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதியாக 8ம் வகுப்பு மற்றும் B.Scயில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இவர்களுடைய வயது 18 முதல் 32 வரை இருத்தல் அவசியம். இந்த பணிக்கு தேர்ந்தெடுப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 8,784 வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க மே 3ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் விபரங்களை அறிய www.tncsc.tn.gov.in என்ற இணையத்தை அணுகவும்.

Exit mobile version