மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டும் வரும், காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் காலியாக உள்ள துணை இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : காதி மற்றும் கிராம தொழில் ஆணையம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 16
பணி : துணை இயக்குநர்
கல்வத் தகுதி : பொறியியல், தொழில்நுட்பம் பிரிவில் இளநிலைப் பட்டம், பட்டயக் கணக்கு அல்லது ஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.67,700 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக kviconline.gov.in என்ற இணையதளம் மூலம் 15.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : தனிப்பட்ட நேர்காணலில் கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்கான வெயிட்டேஜ் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.1,500
பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் kviconline.gov.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.