தேசிய உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..பி.இ.பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

தேசிய உர நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

பணி: தேசிய உர நிறுவனத்தில் Engineer & Manager பணிகளுக்கு 40 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் B.Tech./ B.E./ B.Sc. Engg தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 40,000 /- முதல் அதிகபட்சம் ரூ. 2,00,000 /- வரை சம்பளம் வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் online test & interview செயல்பாடுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

UR/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ. 700 /-

SC, ST, ExSM, PwBD and Departmental விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த வேண்டியதில்லை

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள், http://www.nationalfertilizers.com என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து 25.09.2020 தேதிக்குள் அவற்றை பூர்த்தி செய்து ,
Chief Manager (HR), National Fertilizers Limited, A-11, Sector-24, Noida, District Gautam Budh Nagar, Uttar Pradesh – 201301 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்

Exit mobile version