புதுடெல்லி: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தில் சிஸ்டம் அட்மின் மற்றும் கிராபிக் டிசைனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சிஸ்டம் அட்மின் பணிக்கு 2 இடங்களும், கிராபிக் டிசைனர் பணிக்கு ஓர் இடமும் உள்ளன. இவை டெல்லியில் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. விண்ணப்பதாரர்களின் வயது 45-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி – சம்பளம்
சிஸ்டம் அட்மின் பணிக்கு கணினி அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி., எம்.சி.ஏ. அல்லது அதற்கு மேற்பட்ட தகுதி பெற்றிருக்க வேண்டும். Windows, Linux, Apache மற்றும் Tomcat உள்ளிட்டவற்றில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அவசியம். தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் ₹75,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்.
கிராபிக் டிசைனர் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கிராபிக் டிசைனிங், மல்டிமீடியா அல்லது வீடியோ உருவாக்கம் மற்றும் எடிட்டிங் தொடர்பான டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. மாதம் ₹45,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்.
Adobe Photoshop, Illustrator, InDesign, CorelDRAW ஆகிய மென்பொருள்களில் அனுபவம் பெற்றிருப்பதுடன், லோகோ, பேனர், சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் போஸ்டர்கள் வடிவமைக்கும் திறனும் எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பப் படிவத்தை தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, பணி அனுபவம் மற்றும் வயதுச் சான்றுகளின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை விரைவுத் தபால் மூலமாகவோ அல்லது வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரிலோ சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்ப முகவரி: General Services Section, Room No. 202, NCDC, 22–Sham Nath Marg, Delhi–110054.
கடைசி நாள்: அக்டோபர் 16, 2026, மாலை 5 மணி.
