சிவில் இன்ஜினியரிங் முடித்தவருக்கு தமிழக அரசில் வேலை செய்ய வாய்ப்பு…

பணிபார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
Civil Engg Jobs

மொத்தப் பணியிடங்கள் : 17

நிறுவனம் : ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

பணியிடம் : கோயம்புத்தூர்

பதவி மற்றும் காலியிடங்கள் : 

பணிபார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர் (Overseer / Junior Draughting Officer)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.12.2020

வயது வரம்பு : 01.07.2020-ன் படி, 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு.

கல்வித் தகுதி : சிவில் இன்ஜினியரிங் துறையில் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேர முறையிலோ, டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2020/11/2020111953.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு), மாவட்ட ஆட்சியகம், கோயம்புத்தூர் -641 018.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2020/11/2020111953.pdf அல்லது https://www.ncs.gov.in/ அல்லது https://coimbatore.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version