பாதுகாப்புத் தலைவர் பதவிக்கான பணியிடத்தை நிரப்புவதற்கான ஆணையை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி கடைசி நாள்.தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்தப் பணியிடங்கள் : 01
நிறுவனம் : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corporation Limited – IOCL)
வேலை இடம்: சென்னை
பதவி மற்றும் காலியிடங்கள் :
பாதுகாப்புத் தலைவர் (Security Chief) – 01
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.09.2020
தேர்வு முறை : எழுத்துதேர்வு / நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.iocl.com/PeopleCareers/PDF/Application-Security-Chief-SRPL.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து,சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Indian Oil Corporation Limited, Southern Region Pipelines, House of Four Frames, 6/13, Wheatcroft Road, Nungambakkam, Chennai-34.
கல்வித் தகுதி : குறைந்தபட்ச பட்டதாரி மற்றும் தமிழக மாநிலத்தில் இருந்து காவல்துறை சேவைகள், மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லது, போலீஸ் சூப்பிரண்டாக (டி.எஸ்.பி) இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பிப்பவருக்கு 01.05.2020 தேதியின்படி 65 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://www.iocl.com/PeopleCareers/PDF/Recruitment_for_the_Post_of_Security_Chief_on_contract_basis_at_Southern_Region_Pipelines_of_IndianOil.pdf என்ற இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!