சென்னை உயர்நீதிமன்றத்தில் நல்ல பதவிக்கு ஆட்கள் தேவை : மாதந்தோறும் ரூ 45 ஆயிரம் சம்பளம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் நல்ல பதவிக்கு ஆட்கள் தேவை மாதந்தோறும் ரூ 45 ஆயிரம் சம்பளம் விண்ணப்பிக்கலாம்.

சென்னை :

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மொத்தம் 4 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. Research Fellow and Research Assistant போன்ற பணிகளுக்காக காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பின்படி வாய்மொழி தேர்வு மற்றும் உடற்தகுதி போன்ற தேர்வுகள் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் ஓராண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியமர்த்தப்படுவார்கள். www.mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடலாம். Research Fellow பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது. இதற்கு மாத ஊதியமாக 45 ஆயிரம் வழங்கப்படும். சட்டப்படிப்பு முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி ஜனவரி 22/01/2021 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more – மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை: டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவிப்பு

அது போல் Research Assistant பணிக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ரூ 30000 மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த பதவிக்கு சட்டத் துறையில் பட்டம் முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு இரு பதவிகளுக்கும் 30 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் இல்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சுய சான்றொப்பம் அளித்து 10, 12 ஆம் வகுப்பு சான்றிதழ்கள், டிகிரி சான்றிதழ், என்ரோல்மென்ட் சான்றிதழ், கம்ப்யூட்டர் திறன் குறித்த சான்றிதழ் ஏதேனும் இருந்தால் அதையும் வைத்து The Registrat (Recruitment), Highcourt, Madras- 600014 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அது போல் என்ற recruitment.mhc@gov.in மெயிலுக்கும் அனுப்பலாம். 

Exit mobile version