தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை.. ரூ.2 லட்சம் வரை ஊதியம்

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் Scientist & Technician ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

பணியிடங்கள்:

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் Scientist & Technician பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள்

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் BE/B.Tech தேர்ச்சி பெற்றவராக அல்லது அதற்கு இணையான தேர்ச்சி இருக்க வேண்டும்.

மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 19,900 முதல் அதிகபட்சமாக ரூ. 2,16,600 வரை சம்பளமாக வழங்கப்படும். பணிகளுக்கான ஊதியம் வேறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய https://services.niot.res.in/IOAS/ENPRePrintOnlineApplication/Index என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 07.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம்.

Exit mobile version