அரசு வேளாண் பல்கலைக்கழகத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 20

பணி : ஓட்டுநர்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.tnausms.in/ என்ற இணையதளம் மூலம் 09.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு (OMR வடிவத்தில்), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் வாய்வழி நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ. 750
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 500
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnausms.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Exit mobile version